தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ கரூர் கல்யாண பசுபதீஸ்வரர்கோவிலில் பிரதோஷ விழா

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர்கோவிலில் பிரதோஷ விழா

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர்கோவிலில் பிரதோஷ விழா


ADDED : மார் 28, 2025 01:11 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 28, 2025 01:11 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர்கோவிலில் பிரதோஷ விழா

கரூர்:கரூர், கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் நேற்று பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது.பால், பன்னீர், தயிர், மஞ்சள், இளநீர் உள்பட பல்வேறு வகையான வாசனை திரவியங்களால் நந்திக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

நந்திக்கு வெள்ளி கவசம் சாத்தப்பட்டு, மலர்களால் அலங்கரிக்கப்பட்டது. பின் மகா தீபாராதனை காட்டப்பட்டது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

* தவிட்டுப்பாளையம் அருகே நஞ்சை புகழூரில் உள்ள, பாகவல்லிஅம்பிகை சமேத மேக பாலீஸ்வரர் கோவிலில், ஆடி மாத வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பெருமானுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், விபூதி, மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், தேன் உள்ளிட்ட, 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. சுவாமி ரிஷப வாகனத்தில் கோவிலை வலம் வந்தார். சிறப்பு அலங்காரத்தில் நந்தி பெருமான், பாகவல்லி அம்பிகை சமேத மேகபாலீஸ்வரர் பக்தர்களுக்கு காட்சி யளித்தனர்.

* திருக்காடுதுறை, மாதேஸ்வரி அம்பிகை உடனுறை மாதேஸ்வரன் கோவில், புன்னம்சத்திரம் அருகே புன்னம் பகுதியில் உள்ள புன்னைவனநாதர் உடனுறை புன்னைவன நாயகி கோவில், குந்தாணிபாளையம் நத்தமேட்டில் உள்ள ஈஸ்வரன் கோவில்களில்

பிரதோஷ வழிபாடு நடந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us