தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ கரூரில் சுட்டெரிக்கும் வெயில்பொதுமக்கள் அனலில் தவிப்பு

கரூரில் சுட்டெரிக்கும் வெயில்பொதுமக்கள் அனலில் தவிப்பு

கரூரில் சுட்டெரிக்கும் வெயில்பொதுமக்கள் அனலில் தவிப்பு


ADDED : மார் 28, 2025 01:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 28, 2025 01:12 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூரில் சுட்டெரிக்கும் வெயில்பொதுமக்கள் அனலில் தவிப்பு

கரூர்:கரூரில் சுட்டெரிக்கும் வெயிலால், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.கோடை காலம் எனப்படும் ஏப்ரல், மே மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். இதில், அக்னி நட்சத்திரம் காலக்கட்டத்தில் வெயில் உக்கிரம் உச்சத்தை தொடும். கடந்த சில நாட்களாக, சில மாவட்டங்களில் வெயில், 100 டிகிரியை தாண்டி உள்ளது. அந்த வகையில் கரூரிலும் சில நாட்களாக, 100 டிகிரி பாரன்ஹீட் தாண்டி வெயில் கொளுத்துகிறது. நேற்று கூட 100.4 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானதால், மதிய வேளையில் பொதுமக்கள் வெளியில் வரமுடியாமல் வீட்டில் முடங்கினர்.

சாலைகளில் கானல் நீர் தென்படுகிறது. வெயிலில் இருந்து பொதுமக்கள் தற்காத்துக் கொள்ள சாலைகளில் குடை பிடித்தபடி செல்கின்றனர். சிலர் தொப்பி அணிந்தும், துப்பட்டா மற்றும் துண்டால் போர்த்தியபடியும் செல்கின்றனர். நேற்றைய கடுமையான வெப்பத்தால், பொதுமக்கள் வியர்வையில் நனைந்தனர். வெயிலில் இருந்து தப்பிக்க, பொதுமக்கள் உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடிய பழச்சாறுகளை அருந்தி வருகின்றனர். தர்பூசணி, நுங்கு விற்பனை சூடு பிடித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us