/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
காலநிலை மாற்றத்துறை சார்பில் பயிற்சி பட்டறை
/
காலநிலை மாற்றத்துறை சார்பில் பயிற்சி பட்டறை
ADDED : ஏப் 03, 2025 01:42 AM
காலநிலை மாற்றத்துறை சார்பில் பயிற்சி பட்டறை
கரூர்:தமிழக அரசு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை சார்பில், எஸ்.பி., அலுவலகத்தில் நேற்று பயிற்சி பட்டறை
நடந்தது.
அதில், காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள, மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள், கார்பன் குறைப்பு நடவடிக்கைகள், சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வகையில், பாதுகாப்பான வாழ்வியல் முறைகள், காலநிலை மாற்றத்தால் ஏற்படும் குற்றங்கள் அதிகரிப்பு போன்ற தலைப்புகளில், விளக்கம் அளிக்கப்பட்டது.
பயிற்சி பட்டறையில், ஏ.டி.எஸ்.பி., ஜெயச்சந்திரன், ஆயுதப்படை டி.எஸ்.பி., வெங்கடாசலம், பேராசிரியர்கள் சூரியன் ஜோசப், இளங்கோவன், முதல்வரின் பசுமை தோழர் கோபால் மற்றும் போலீசார் பங்கேற்றனர். மேலும், பயிற்சி பட்டறையில்
பங்கேற்ற அனைவருக்கும், துணி பைகள் வழங்கப்பட்டன.