/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கோடை வெப்பத்தில் இருந்துகால்நடைகளை பாதுகாக்கும் வழிமுறை
/
கோடை வெப்பத்தில் இருந்துகால்நடைகளை பாதுகாக்கும் வழிமுறை
கோடை வெப்பத்தில் இருந்துகால்நடைகளை பாதுகாக்கும் வழிமுறை
கோடை வெப்பத்தில் இருந்துகால்நடைகளை பாதுகாக்கும் வழிமுறை
ADDED : ஏப் 04, 2025 01:05 AM
கோடை வெப்பத்தில் இருந்துகால்நடைகளை பாதுகாக்கும் வழிமுறை
கரூர்:கோடை வெப்பத்தில் இருந்து, கால்நடைகளை பாதுகாக்க மேற்கொள்ள வேண்டிய பராமரிப்பு முறைகள், குறித்து கால்நடை பராமரிப்புத் துறையினர் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
அதில் கூறியிருப்பதாவது: கரூர் மாவட்டத்தில் வெயில் சுட்டெரித்து வருகிறது. கால்நடைகளுக்கு உயர் வெப்பத்தால் ஏற்படும் அயற்சி பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
அதிகமாக உமிழ்நீர் வடிதல், அதிகமாக தண்ணீர் பருகுதல், பகலில் குறைவாக தீவனம் உட்கொள்ளுதல், நிழலில் தஞ்சம் புகுதல், வாயை திறந்த நிலையில் வேகமாக சுவாசித்தல் போன்றவை வெப்ப அயற்சியின் அறிகுறிகளாகும். இதிலிருந்து கால்நடைகளை காப்பாற்ற காலை மற்றும் மாலை நேரங்களில் வெயிலுக்கு முன், மேய்ச்சலுக்கு விட வேண்டும். கறவை மாடுகளுக்கு ஒரு நாளைக்கு, 4 முதல், 5 முறையாவது உகந்த தண்ணீர் கொடுக்க வேண்டும். தண்ணீரின் மீது கலப்பு தீவனத்தை சிறிதளவு துாவும்போது, கால்நடைகள் அதிக தண்ணீர் குடிக்கும். தாது உப்புக்கலவை, வைட்டமின்கள் கொடுப்பதன் மூலம் வெப்ப அயற்சி அறிகுறிகள் குறைவதுடன் உற்பத்தி குறையாமல் இருக்கும்.
ஆடுகளுக்கு தடுப்பூசி அவசியம்ஆடுகளுக்கு ஒரு நாளைக்கு குறைந்தபட்சம், 8 முதல், 12 லிட்டர் சுத்தமான தண்ணீர் கொடுக்க வேண்டும். ஆடுகளுக்கு தடுப்பூசிகளை உரிய காலத்தில் செலுத்த வேண்டும். கோடையில் கிடைக்கும் புரதச்சத்து மிக்க வெல்வேல், கருவேல் உலர் காய்களை ஆடுகளுக்கு உணவாக கொடுக்கலாம். வேளாண் உபபொருட்கள், மர இலை அல்லது புண்ணாக்கை தீவனமாக அளிக்கலாம். கோழிகளுக்கு விடியற்காலை, இரவிலும் தீவனம் அளிக்க வேண்டும். குடிநீரில் வைட்டமின்கள் பி.காம்ப்ளக்ஸ், குளுக்கோஸ் கலந்து கொடுக்கலாம். கால்நடைகளுக்கு அவசர சிகிச்சை தேவைப்படுமாயின், 1962 என்ற ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவ உதவி பெறலாம்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

