/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் மின்பகிர்மான வட்டத்தில்நாளை சிறப்பு முகாம்
/
கரூர் மின்பகிர்மான வட்டத்தில்நாளை சிறப்பு முகாம்
ADDED : ஏப் 04, 2025 01:13 AM
கரூர் மின்பகிர்மான வட்டத்தில்நாளை சிறப்பு முகாம்
கரூர்:கரூர் மின்பகிர்மான வட்டத்தில் நாளை சிறப்பு முகாம் நடக்கிறது.இது குறித்து, கரூர் மின்வாரிய செயற்பொறியாளர் கணிகை மார்த்தாள் வெளியிட்ட அறிக்கை: கரூர் மின்பகிர்மான வட்டத்தின் கீழ் செயல்படும், கரூர் செயற்பொறியாளர் அலுவலகம், குளித்தலை செயற்பொறியாளர் அலுவலகம், கரூர் கிராமியம் செயற்பொறியாளர் அலுவலகம் ஆகிய அலுவலகங்களில் நாளை (5ம் தேதி) காலை 11:00 முதல் மாலை, 5:00 மணி வரை சிறப்பு முகாம் நடக்கிறது. மின் கணக்கீடு, சராசரி மின் கட்டணம் சார்ந்த குறைகள், மின் மீட்டர், சேதமடைந்த மின் கம்பம் மாற்றம், குறைந்த மின்னழுத்தம் உள்பட இதர மின்சார சேவை தொடர்பான குறைகள் குறித்து, மனு அளிக்கலாம்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.