ADDED : ஏப் 05, 2025 01:44 AM
அ நிறம் | அளவு
சாலையில் குவிந்துள்ள குப்பைவாகன ஓட்டுனர்கள் அவதி
கரூர்:கரூர் அருகே, சாலையில் அதிகளவில் குப்பை குவிந்துள்ளதால், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.
கரூர்-வாங்கல் சாலை வழியாக, நாமக்கல் மாவட்டம், மோகனுார், திருச்சி மாவட்டம் காட்டுபுத்துார் பகுதிகளுக்கு பஸ், லாரி, கார் உள்ளிட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில், அரசு காலனி வசந்தம் நகரில் சாலையில் கடந்த சில நாட்களாக, அதிகளவில் குப்பை தேங்கியுள்ளது.
குறிப்பாக, இறைச்சி, மருத்துவ கழிவுகள் அதிகளவில் குவிந்துள்ளது. இதனால், அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் அவதிப்படுகின்றனர். மேலும், சாலையில் குவிந்துள்ள குப்பையால், டூவீலர்களில் செல்பவர்கள் தடுமாறுகின்றனர். எனவே, வசந்தம் நகரில் குவிந்துள்ள குப்பையை, உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.
