/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மொபைல் போன் திருட்டுகூலி தொழிலாளி கைது
/
மொபைல் போன் திருட்டுகூலி தொழிலாளி கைது
ADDED : ஏப் 08, 2025 01:42 AM
மொபைல் போன் திருட்டுகூலி தொழிலாளி கைது
கரூர்:கரூரில், பொறியியல் கல்லுாரி மாணவனின், மொபைல் போனை திருடிய, கூலி தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவில் பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் என்பவரது மகன் கார்த்திகேயன், 23; இவர், கரூர் காமராஜபுரம் வடக்கு பகுதியில் உள்ள, விடுதியில் தங்கி, க.பரமத்தியில் உள்ள தனியார் பொறியியல் கல்லுாரியில் பி.டெக்., மூன்றாவது ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில், கார்த்திகேயன் விடுதி அறையில் வைத்திருந்த, 36 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மொபைல் போனை கடந்த மாதம், 23ல் காணவில்லை. இதுகுறித்து, கார்த்திகேயன் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து, போலீசார் நடத்திய விசாரணையில் மொபைல் போனை திருடியது, திருச்சி மாவட்டம், உறையூரை சேர்ந்த கூலி தொழிலாளி லட்சுமி நாராயணன், 24, என தெரிய வந்தது. பிறகு, லட்சுமி நாராயணனை கரூர் டவுன் போலீசார் கைது செய்தனர்.

