/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வருவாய் துறை அலுவலர்கள்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
/
வருவாய் துறை அலுவலர்கள்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
வருவாய் துறை அலுவலர்கள்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
வருவாய் துறை அலுவலர்கள்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
ADDED : ஏப் 08, 2025 01:43 AM
வருவாய் துறை அலுவலர்கள்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
கரூர்:தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர்கள் சங்கம், கரூர் மாவட்ட கிளை சார்பில், மாவட்ட தலைவர் மோகன்ராஜ் தலைமையில், கலெக்டர் அலுவலகம் முன், நேற்று மாலை ஆர்ப்பாட் டம் நடந்தது.
அதில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அலுவலர்களின் பணி தன்மையை கொண்டு, மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும், காலியாக உள்ள அலுவலக உதவியாளர்களின் பணியிடங்களை நிரப்ப வேண்டும், கருணை அடிப்படையிலான பணி நியமனத்துக்கான உச்சவரம்பை, ஐந்து சதவீதத்தில் இருந்து, 25 சதவீதமாக உயர்த்துவது உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்தில், 25க்கும் மேற்பட்ட வருவாய் துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.