sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/கரூர்/ கிருஷ்ணராயபுரம் பகுதிகளில் மாம்பழம் சீசன் துவக்கம்

கிருஷ்ணராயபுரம் பகுதிகளில் மாம்பழம் சீசன் துவக்கம்

கிருஷ்ணராயபுரம் பகுதிகளில் மாம்பழம் சீசன் துவக்கம்


ADDED : ஏப் 09, 2025 01:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 09, 2025 01:29 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

கிருஷ்ணராயபுரம் பகுதிகளில் மாம்பழம் சீசன் துவக்கம்

கிருஷ்ணராயபுரம்:கிருஷ்ணராயபுரம் சுற்று வட்டார பகுதிகளில், மாம்பழம் சீசன் துவங்கியது.கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட லாலாப்பேட்டை, சிந்தலவாடி, மகாதான புரம், மாயனுார், கிருஷ்ணராயபுரம், சேங்கல், திருக்காம்புலியூர், கருப்பத்துார், கள்ளப்பள்ளி, புதுப்பட்டி ஆகிய பகுதிகளில் விவசாயிகள் மா சாகுபடி செய்து வருகின்றனர். சில மாதங்களுக்கு முன்பு பெய்த மழையால், மரங்களிலேயே பழங்கள் பழுத்து வருகின்றன. இந்த பழங்களை, வியாபாரிகளிடம் மொத்த விலைக்கு, விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனர்.

கரூர் - திருச்சி நெடுஞ்சாலை அருகில், மாந்தோப்புகளில் இயற்கை முறையில், மாம்பழம் பழுக்க வைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. செந்துாரம் மாம்பழம் கிலோ, 70 ரூபாய், பங்கனபள்ளி, 130, இமாம்பசந், 200, அல்போன்சா, 100, நீலம் மாம்பழம் கிலோ, 80 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. சீசன் துவக்கம் காரணமாக, வியாபாரிகள் மா விற்பனையை துவக்கியுள்ளனர். மேலும் இந்த பகுதி மாம்பழங்கள் சுவையாக இருப்பதால், வாகனங்களில் ஊர்களுக்கு செல்வோர் வாங்கி செல்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us