ADDED : ஏப் 10, 2025 01:17 AM
குளித்தலையில் வட்ட அளவில்கண்காணிப்பு குழு கூட்டம்
குளித்தலை:குளித்தலை தாலுகா அலுவலகத்தில், நேற்று வட்ட அளவில் கண்காணிப்பு குழு கூட்டம் தாசில்தார் இந்துமதி தலைமையில் நடந்தது.
துலைமையிடத்து துணை தாசில்தார் ஜெயவேல்காந்தன். மண்டல துணை தாசில்தார்கள் நீதிராஜன், மருதை ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், குளித்தலை தாலுகாவில் சட்டவிரோதமாக கனிமங்கள் கடத்தலை தடுக்கும் வகையில், கண்காணிப்பு குழு கூட்டம் நடத்தி, 15 தினங்களுக்கு ஓரு முறை அறிக்கை தயார் செய்து கலெக்டர், சப் - கலெக்டருக்கு அனுப்ப வேண்டும். கிராமங்களில் அனுமதியில்லாமல், கனிமங்கள் கடத்துவது குறித்து கண்டறிந்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க, வருவாய் துறை பணியாளர்கள் செயல்படவேண்டும் என, தாசில்தார் கேட்டுக்கொண்டார். இக்கூட்டத்தில் ஆர்.ஐ.,க்கள் தமிழரசி, பானுமதி, முத்துக்கண்ணு மற்றும் வி.ஏ.ஓ.,க்கள் கலந்து கொண்டனர்.
