sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/கரூர்/ கரூர் சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு

கரூர் சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு

கரூர் சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு


ADDED : ஏப் 11, 2025 01:23 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 11, 2025 01:23 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

கரூர் சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு

கரூர்:கரூர், கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் நேற்று பிரதோஷத்தை முன்னிட்டு, சிறப்பு வழிபாடு நடந்தது. நந்திக்கு பால், தயிர், பன்னீர், பஞ்சாமிர்தம், சந்தனம், மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட, 18 வகையான பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது.

நந்திக்கு வெள்ளி கவசம் சாத்தப்பட்டு, மலர்களால் அலங்கரிக்கப்பட்டது. பின் மகா தீபாராதனை காட்டப்பட்டது. ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். தொடர்ந்து மூலவர், நடராஜர் மற்றும் நந்தி சிலைக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது. பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

* தவிட்டுப்பாளையம் அருகே நஞ்சை புகழூரில் உள்ள, பாகவல்லிஅம்பிகை சமேத மேக பாலீஸ்வரர் கோவிலில், ஆடி மாத வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பெருமானுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், விபூதி, மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், தேன் உள்ளிட்ட, 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. சுவாமி ரிஷப வாகனத்தில் கோவிலை வலம் வந்தார். சிறப்பு அலங்காரத்தில் நந்தி பெருமான், பாகவல்லி அம்பிகை சமேத மேகபாலீஸ்வரர் பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

* திருக்காடுதுறை, மாதேஸ்வரி அம்பிகை உடனுறை மாதேஸ்வரன் கோவில், புன்னம்சத்திரம் அருகே புன்னம் பகுதியில் உள்ள புன்னைவனநாதர் உடனுறை புன்னைவன நாயகி கோவில், குந்தாணிபாளையம் நத்தமேட்டில் உள்ள ஈஸ்வரன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது.

* குளித்தலை, கடம்பவனேஸ்வரர் கோவிலில் நந்தீஸ்வரருக்கு தேன், பன்னீர், இளநீர், சந்தனம், பால், பழங்கள் மற்றும் திரவியங்களால், கந்தசுப்பிரமணிய குருக்கள் சிறப்பு அபிஷேகம் செய்தார். ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.

இதேபோல், அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர், சிவாயம் சிவபுரீஸ்வரர், குளித்தலை மீனாட்சி சுந்தரேஸ்வர், மேட்டுமருதுார் ஆராஅமுதீஸ்வரர், மருதுார் மீனாட்சி சுந்தரேஸ்வரர், தண்ணீர்பள்ளி ஏகாம்பரேஸ்வரர், பெரியபாலம் நதிஈஸ்வரர், ஆர்.டி.மலை விராச்சிலேஸ்வரர் கோவில், சின்னரெட்டியபட்டி ஆவுடைலிங்கேஸ்வரர், தோகைமலை மீனாட்சி சுந்தரேஸ்வரர், இடையபட்டி ரத்தினகிரீஸ்வரர், கழுகூர் மீனாட்சி சுந்தரேஸ்வரர் சிவாலயங்களில் பிரதோஷ சிறப்பு பூஜை நடந்தது. திரளான பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us