கட்டி முடிக்கப்பட்ட கழிப்பிடத்தை திறக்க எதிர்பார்ப்பு
கட்டி முடிக்கப்பட்ட கழிப்பிடத்தை திறக்க எதிர்பார்ப்பு
ADDED : ஏப் 12, 2025 01:27 AM
கரூர், க.பரமத்தி அருகே, கட்டி முடிக்கப்பட்ட பொது கழிப்பிடத்தை உடனடியாக திறக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
கரூர் மாவட்டம், க.பரமத்தி பஞ்., யூனியன் பாலமலை பகுதியில், 350க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில், ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். அவர்கள் திறந்த வெளி பகுதியை, கழிப்பிடமாக பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.
இதனால், பாலமலையில் புதிய பொது கழிப்பிடம் கட்டி தரக்கோரி, அப்பகுதியினர், கரூர் மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை வைத்தனர். இதையடுத்து, துாய்மை பாரத இயக்கம் கீழ், ஐந்து லட்சத்து, 25 ஆயிரம் ரூபாய் செலவில், பாலமலையில் புதிய கழிப்பிடம் கட்டப்பட்டது.
ஆனால் இதுவரை திறக்கப்படவில்லை. இதனால், பாலமலை மக்கள் திறந்த வெளிப்பகுதியை கழிப்பிடமாக பயன்படுத்தி வருகின்றனர். இதனால், அப்பகுதியில் துர்நாற்றம் மற்றும் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, புதிதாக கட்டப்பட்ட கழிப்பிடத்தை திறந்து விட, கரூர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
