தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பக்தர்கள் தீர்த்தக்குட ஊர்வலம்

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பக்தர்கள் தீர்த்தக்குட ஊர்வலம்

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பக்தர்கள் தீர்த்தக்குட ஊர்வலம்


ADDED : ஏப் 27, 2026 03:11 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 27, 2026 03:11 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கிருஷ்ணராயபுரம்:கள்ளப்பள்ளி தெற்கு மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, பக்தர்கள் தீர்த்தக்குடம் எடுத்துக்கொண்டு ஊர்வலமாக சென்றனர்.

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அடுத்த கள்ளப்பள்ளி தெற்கு கிராமத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் சில நாட்களாக புனரமைப்பு பணிகள் நடந்து வந்தன. பணிகள் முற்றிலும் முடிந்ததை அடுத்து, வரும், 29ல் கும்பாபிஷேகம் நடக்கிறது.

அதையொட்டி, நேற்று காலை, கிராம மக்கள் மற்றும் பக்தர்கள், லாலாப்பேட்டை காவிரி ஆற்றுக்கு சென்று குடங்களில் புனித நீரை எடுத்துக்கொணடு ஊர்வலமாக சென்றனர். லாலாப்பேட்டை, கொடிக்கால் தெரு வழியாக ஊர்வலமாக சென்ற மக்கள், கள்ளப்பள்ளி கிராமத்தில் உள்ள கோவிலில் வந்து சேர்ந்தனர். இதில், 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us