ADDED : மே 11, 2026 03:36 AM
அ நிறம் | அளவு
குளித்தலை:குளித்தலை
முத்து பூபால சமுத்திரம் மகா மாரியம்மன் கோவில்
திருவிழாவையொட்டி, திம்மாச்சிபுரம், புதுப்பாளையம்,
கோட்டைமேடு, வைகைநல்லுார் அக்ரஹாரம், பெரிய பாலம் பகுதி பொதுமக்கள்,
கடம்பர் கோவில் காவிரி ஆற்றில் இருந்து பால்குடம், தீர்த்தக்குடம்,
அக்னி சட்டி மற்றும் குழந்தைகளை கரும்பில் தொட்டில் துாக்கி முக்கிய
வீதி வழியாக மேளதாளம் முழங்க, ஊர்வலமாக மாரியம்மன் கோவிலை
சென்றடைந்தனர்.
தொடர்ந்து, பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை செய்து வழிபட்டனர்.
