தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ பள்ளபட்டி மேல்நிலைப்பள்ளி சதுரங்க போட்டியில் சிறப்பிடம்

பள்ளபட்டி மேல்நிலைப்பள்ளி சதுரங்க போட்டியில் சிறப்பிடம்

பள்ளபட்டி மேல்நிலைப்பள்ளி சதுரங்க போட்டியில் சிறப்பிடம்


ADDED : ஜூலை 16, 2026 03:57 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 16, 2026 03:57 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அரவக்குறிச்சி:ஒன்றிய அளவில் நடந்த சதுரங்க போட்டியில், வெற்றி பெற்ற பள்ளப்பட்டி மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், மாவட்ட அளவிலான போட்டிக்கு தேர்வாகினர்.

அரவக்குறிச்சி ஒன்றிய அளவிலான சதுரங்க போட்டி, சின்னதாராபுரத்தில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இதில், பள்ளப்பட்டி மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், 17 வயதுக்குட்பட்ட பிரிவில் வெற்றிவேல் என்ற மாணவர் இரண்டாம் இடம், 19 வயதுக்குட்பட்ட பிரிவில் சத்யஜீவன் இரண்டாம் இடம், மாணவியர் அணியில், 14 வயதுக்குட்பட்ட பிரிவில் லக் ஷனா இரண்டாம் இடம் பெற்று வெற்றி பெற்றனர். இதன் மூலம் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டிக்கு, அரவக்குச்சி ஒன்றிய அளவில் மாணவ, மாணவியர் தேர்வு பெற்றுள்ளனர்.

வெற்றி பெற்றவர்களை, பள்ளப்பட்டி மேல்நிலைப்பள்ளி தாளாளர் ஹாஜி கஜனபர் அலி, தலைமை ஆசிரியர் முகமது இஸ்மாயில், உதவி தலைமை ஆசிரியர்கள் தாஜூதீன், பள்ளப்பட்டி எஜூகேஷன் சொசைட்டியின் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஆசிரியர்கள் பாராட்டினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us