கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர் கூட்டணி ஆர்ப்பாட்டம்
கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர் கூட்டணி ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 23, 2026 06:13 AM
அ நிறம் | அளவு
கரூர்:கரூர்
வட்டார கல்வி அலுவலகம் முன், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்
கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், வட்டார தலைவர் மதன்
தலைமை வகித்தார்.
இங்கு, தமிழக அரசு ஆசிரியர் தகுதித்தேர்வை ரத்து
செய்ய வேண்டும். இம்மாதம் நடந்த ஆசிரியர் சிறப்பு தகுதி தேர்வில்,
ஆசிரியர்களின் பணிக்காலத்திற்கு ஏற்ப, கூடுதல் மதிப்பெண்கள் வழங்க
வேண்டும். ஆசிரியர்களின் பணிக்காலத்தில் பெற்ற உயர்
கல்வித்தகுக்கு ஏற்ப கூடுதல் மதிப்பெண் வழங்க வேண்டும் என்பன
உள்ளிட்ட, ஐந்து அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில்,
மாவட்ட செயலர் மணிகண்டன், வட்டார செயலர் ஜெயராஜ், வட்டார பொருளாளர்
சிவப்பிரகாசம் உள்பட பலர் பங்கேற்றனர்.
