/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
விவசாயம் செழிக்க 101 திருவிளக்கு பூஜை
/
விவசாயம் செழிக்க 101 திருவிளக்கு பூஜை
ADDED : ஜன 19, 2025 01:51 AM
விவசாயம் செழிக்க 101 திருவிளக்கு பூஜை
குளித்தலை,:குளித்தலை அடுத்த, பொருந்தலுார் பஞ்,. தெலுங்கபட்டி அண்ணா நகரில் உள்ள, மாரியம்மன் கோவிலில் கிராம மக்கள் சார்பில், முதலாம் ஆண்டை முன்னிட்டு, விவசாயம் செழிக்க வலியுறுத்தி, 101 திருவிளக்கு பூஜை நடந்தது.
விழா குழு சார்பில், அனைத்து சமூகத்தினரையும் ஒருங்கிணைத்து நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டு, இப்பகுதி மக்கள் விரதம் இருந்து வந்தனர். நேற்று முன்தினம் மாலை, 101 திருவிளக்கு பூஜை நடந்தது. பூஜைக்கு வந்த பெண்கள், ஐந்து முக குத்துவிளக்குகளையும் கொண்டு வந்திருந்தனர். பூஜை பொருட்கள் அனைத்தும் விழா குழுவினர் வழங்கினர். உலக அமைதி ஏற்படவும், பருவ மழை பெய்து, விவசாயம் செழிக்கவும் வலியுறுத்தும் வகையில் திருவிளக்கு பூஜையில், பெண்கள் கலந்து கொண்டனர்.

