தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ குளித்தலை நகராட்சி கூட்டம்: 27 தீர்மானங்கள் நிறைவேற்றம்

குளித்தலை நகராட்சி கூட்டம்: 27 தீர்மானங்கள் நிறைவேற்றம்

குளித்தலை நகராட்சி கூட்டம்: 27 தீர்மானங்கள் நிறைவேற்றம்


ADDED : மார் 01, 2025 01:33 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 01, 2025 01:33 AM


Follow on Google
அ நிறம் | அளவு

குளித்தலை நகராட்சி கூட்டம்: 27 தீர்மானங்கள் நிறைவேற்றம்

குளித்தலை: குளித்தலை நகராட்சி கூட்டரங்கத்தில், நேற்று அவசர கூட்டம் தலைவர் சகுந்தலா தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் கணேசன், கமிஷனர் நந்தகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நகராட்சி மேலாளர் தேவராஜன் தீர்மானங்களை வாசித்தார். கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:தி.மு.க., கவுன்சிலர் சக்திவேல்: கூட்டத்தில் பொது விவாதத்திற்கு வைக்கப்படும் பொருள்கள் குறித்து, அனைத்து கவுன்சிலர்கள் அரசின் கொள்கை முடிவுகளை தவிர, மற்ற பொருள்கள் தெரிவிக்கப்பட்டு, கூட்டத்தில் வைக்க வேண்டும்.

தலைவர் சகுந்தலா: சப்ஜெக்ட் நான் பார்த்து வைப்பது; நகராட்சி முழுவதும் நம் ஊரு, நம் மக்கள் என பாரபட்சம் இல்லாமல் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இனிவரும்

கூட்டங்களில் சரி செய்யப்படும்.தி.மு.க., கவுன்சிலர் சக்திவேல்: உழவர் சந்தை பகுதியில் உள்ள தார்ச்சாலை தரமற்ற வகையில் போடப்பட்டுள்ளது. இதனால் அரசுக்கு கெட்ட பெயர் ஏற்பட்டுள்ளது. பணி ஒப்பந்ததாரருக்கு இதற்குரிய தொகையை விடுவிக்கக் கூடாது.

கமிஷனர் நந்தகுமார், தலைவர் சகுந்தலா: சாலைகுறித்து புகார் வந்தது. சாலை ஆய்வு செய்யப்பட்டது. மீண்டும் சரி செய்யப்பட்டு, பணம் விடுவிக்க நடவடிக்கை

எடுக்கப்படும்.தி.மு.க., கவுன்சிலர் பிச்சை: அனைத்து கவுன்சிலர்களின் கோரிக்கைகள் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இக்கூட்டத்தில், 27 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us