/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
நகை, மொபைல் போன்பறித்த 3 பேருக்கு 'காப்பு'
/
நகை, மொபைல் போன்பறித்த 3 பேருக்கு 'காப்பு'
ADDED : ஜன 31, 2025 01:20 AM
நகை, மொபைல் போன்பறித்த 3 பேருக்கு 'காப்பு'
குளித்தலை,:திருச்சி மாவட்டம், கீழபஞ்சப்பூர் பகுதியை சேர்ந்தவர் சரண், 20; இவர் கடந்த, 28 மதியம், 2:00 மணிக்கு, தன் டூவீலரில் லாலாப்பேட்டையில் உள்ள நண்பர் வீட்டுக்கு சென்றார். பின் மாலை வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது, அய்யர்மலை - இரும்பூதிப்பட்டி பிரிவு சாலையில், 3 வாலிபர்கள் டூவீலரை மறித்து நிறுத்தினர். தொடர்ந்து, சரண் கழுத்தில் அணிந்திருந்த வெள்ளி சங்கிலி, பிரேஸ்லெட், மொபைல் போன் ஆகியவற்றை மிரட்டி பறித்துக்கொண்டனர். இதுகுறித்து, சரண், குளித்தலை போலீசில் அளித்த புகார்படி, டூவீலரை மறித்து வழிப்பறியில் ஈடுபட்ட வைகைநல்லுார் பஞ்., மேலகுட்டப்பட்டியை சேர்ந்த கனகராஜ், 22, விஸ்வநாதன், 37, கணக்கப்பிள்ளையூர் சங்கப்பிள்ளை, 36, ஆகிய மூவரை கைது செய்தனர்.

