/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
திருச்சி சரகத்தில் 32 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்
/
திருச்சி சரகத்தில் 32 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்
திருச்சி சரகத்தில் 32 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்
திருச்சி சரகத்தில் 32 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்
ADDED : பிப் 19, 2025 02:32 AM
திருச்சி சரகத்தில் 32 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்
கரூர்:திருச்சி போலீஸ் சரகத்தில், 32 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.குட்கா வியாபாரிகளிடம், பணம் பறிப்பு விவகாரத்தில் சிக்கிய கரூர் இன்ஸ்பெக்டர், மாயனுாருக்கும், இளம் பெண்ணிடம் போட்டோ அனுப்ப சொல்லி கெஞ்சிய, வெங்கமேடு இன்ஸ்பெக்டர், அறந்தாங்கிக்கும் துாக்கி அடிக்கப்பட்டனர். திருச்சி போலீஸ் சரகத்தில், நேற்று முன்தினம், 32 இன்ஸ்பெக்டர்கள் பல்வேறு மாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்யப்
பட்டனர். அதன்படி, கரூர் மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் ரஷியா சுரேஷ், பெரம்பலுார் குற்ற ஆவண காப்பக பிரிவுக்கும், கரூர் சைபர் கிரைம் பிரிவு இன்ஸ்பெக்டர் இசை வாணி, திருச்சி ஜீயபுரம்-2 போலீஸ் ஸ்டேஷனுக்கும் மாற்றப்பட்டனர்.அதேபோல், திருச்சி துவாக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஈஸ்வரன், கரூர் டவுன் போலீஸ் ஸ்டேஷனுக்கும், புதுக்கோட்டை ஆலங்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் பால கிருத்திகா, கரூர் மதுவிலக்கு பிரிவுக்கும் மாற்றப்பட்டனர். கரூர் அருகே வெங்க
மேட்டில், குட்கா வியாபாரிகளிடம் பணம் பறிப்பு விவகாரத்தில் சிக்கிய, கரூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன், மாயனுாருக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அதேபோல், தங்கநகை காணாமல் போன வழக்கில், இளம் பெண்ணிடம் போட்டோ, அனுப்ப சொல்லி வாட்ஸ் ஆப் காலில் கெஞ்சி பேசிய, வெங்கமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்துார் பாண்டியன், திருச்சி சரக டி.ஐ.ஜி., அலுவலகத்தில், காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்தார். அவர் தற்போது, புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி போலீஸ் ஸ்டேஷனுக்கு மாற்றப்பட்டுள்ளார்.