தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ மாயனுார் கதவணைக்கு தண்ணீர் வரத்து 438 கன அடியாக சரிவு

மாயனுார் கதவணைக்கு தண்ணீர் வரத்து 438 கன அடியாக சரிவு

மாயனுார் கதவணைக்கு தண்ணீர் வரத்து 438 கன அடியாக சரிவு


ADDED : ஏப் 05, 2025 01:47 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 05, 2025 01:47 AM


Follow on Google
அ நிறம் | அளவு



கரூர்:மாயனுார் கதவணைக்கு, தண்ணீர் வரத்து, 438 கன அடியாக குறைந்துள்ளது.கரூர் அருகே மாயனுார் கதவணைக்கு, நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி தண்ணீர் வரத்து வினாடிக்கு, 438 கன அடியாக இருந்தது. குடிநீர் தேவைக்காக, அந்த தண்ணீர் முழுவதும் காவிரியாற்றில் திறக்கப்பட்டது. நான்கு பாசன வாய்க்காலில், தண்ணீர் திறப்பு நிறுத்தப்

பட்டது. * திருப்பூர் மாவட்டம், உடுமலை பேட்டை அமராவதி அணைக்கு, நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 13 கன அடி தண்ணீர் வந்தது. இதனால், அமராவதி அணையில் இருந்து, ஆறு மற்றும் புதிய பாசன வாய்க்காலில் திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டது. 90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 47.77 அடியாக இருந்தது.

* க.பரமத்தி அருகே, கார்வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி தண்ணீர் வரத்து நின்றது. 26.90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 9.47 அடியாக இருந்தது. நொய்யல் பாசன வாய்க்காலில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது. அணை நீர்ப்பிடிப்பு பகுதியில், 5.4 மி.மீ., மழை பெய்தது.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us