தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ கரூர் மாவட்டத்தில் 45 பேர் குண்டர்சட்டத்தில் கைது: எஸ்.பி., தகவல்

கரூர் மாவட்டத்தில் 45 பேர் குண்டர்சட்டத்தில் கைது: எஸ்.பி., தகவல்

கரூர் மாவட்டத்தில் 45 பேர் குண்டர்சட்டத்தில் கைது: எஸ்.பி., தகவல்


ADDED : ஜன 11, 2025 01:33 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 11, 2025 01:33 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர் மாவட்டத்தில் 45 பேர் குண்டர்சட்டத்தில் கைது: எஸ்.பி., தகவல்

கரூர் : கரூர் மாவட்டத்தில் கடந்தாண்டு, 45 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ், கைது செய்யப்பட்டுள்ளனர் என,

எஸ்.பி., பெரோஸ்கான் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:கடந்த, 2024ம் ஆண்டில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் வகையில், கரூர் மாவட்டத்தில், 519 பள்ளிகள், 45 கல்லுாரிகள் மற்றும் பொது மக்கள் கூடும் இடங்கள் என, 1,789 இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது.

கரூர் மாவட்டத்தில் கடந்த, 2023ல், 21 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். 2024ல் மது விலக்கு, போதை பொருள் குற்ற சம்பவம், சட்டம்-ஒழுங்கு, மணல் கடத்தல், பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட, 45 பேர் மீது, குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்தாண்டு சைபர் குற்றங்களால் பாதிக்கப்பட்ட பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட, 1,381 புகார்களில், 22 வழக்குகள் மற்றும் 1,198 மனு ரசீதுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் இழந்த, 11 கோடியே, 83 லட்சத்து, 23 ஆயிரத்து, 167 ரூபாயை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சைபர் குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட, 572 பேரில் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு, அதில் இருந்த, ஏழு கோடியே, 89 லட்சத்து, 70 ஆயிரத்து, 853 ரூபாய் முடக்கப்பட்டது. மேலும், ஒரு கோடியே, 41 லட்சத்து, 85 ஆயிரத்து, 182 ரூபாய் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டது. சைபர் கிரைம் குற்றத்தில், 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொதுமக்கள் சைபர் கிரைம் குற்றங்களால், பாதிக்கப்பட்டால் உதவி எண், 1930 அல்லது www.cybercrime.gov.in என்ற இணையதளம் மூலம் புகார் அளிக்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

2 நிறுவனத்தில் தீ விபத்து

குமாரபாளையம்,: குமாரபாளையம், விட்டலபுரி பகுதியில் முறுக்கு நுால் மிஷின் வைத்து தொழில் செய்து வருபவர் குமரேசன், 56; நேற்று முன்தினம் இரவு, 10:30 மணிக்கு, 4 பேர் பணியாற்றிக்கொண்டிருந்தனர்.

அப்போது, நுால் கழிவுகள் கொட்டப்பட்டிருந்த இடத்தில் திடீரென தீவிபத்து ஏற்பட்டு, மளமளவென நிறுவனம் முழுவதும் பரவியது. இதில், 10,000 ரூபாய் மதிப்புள்ள, 100 நுால் கோன் மூட்டைகள், இரண்டு ட்விஸ்டிங் மிஷின், இரண்டு கோன் வைண்டிங் ஆகியவை தீயில் எரிந்து முற்றிலும் சேதமாகின. மேலும், நிறுவனத்தின் உள்ளே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டூவீலர் ஒன்றும் தீயில் எரிந்து சேதமானது.

இந்த நிறுவனத்தின் அருகே, சுப்பிரமணி, 40, என்பவரின் கழிவு பஞ்சு நிறுவனம் உள்ளது. இங்கும் தீப்பற்றியதில் கழிவு பஞ்சுகள் முற்றிலும் எரிந்து சாம்பலாகின.

குமாரபாளையம் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். விபத்து குறித்து, குமாரபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us