/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வெள்ள நிவாரண 5 கிலோ அரிசி பைகளைரேஷன் கடைகளில் வினியோகிக்க உத்தரவு
/
வெள்ள நிவாரண 5 கிலோ அரிசி பைகளைரேஷன் கடைகளில் வினியோகிக்க உத்தரவு
வெள்ள நிவாரண 5 கிலோ அரிசி பைகளைரேஷன் கடைகளில் வினியோகிக்க உத்தரவு
வெள்ள நிவாரண 5 கிலோ அரிசி பைகளைரேஷன் கடைகளில் வினியோகிக்க உத்தரவு
ADDED : மார் 09, 2025 01:34 AM
வெள்ள நிவாரண 5 கிலோ அரிசி பைகளைரேஷன் கடைகளில் வினியோகிக்க உத்தரவு
கரூர்:தமிழகத்தில், புயல் பாதித்த பகுதிகளுக்கு, 5 கிலோ அரிசி பைகள் வழங்கப்பட்டன. அதில் மீதமுள்ளவைகளை, ரேஷன் கடைகளில் வினியோகம் செய்ய அரசு உத்தர
விடப்பட்டுள்ளது.தமிழகத்தில், பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட கடலுார், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள மக்களுக்கு, பல்வேறு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூலம், 5 கிலோ அரிசி பைகளும் தயார் செய்யப்பட்டு, மக்களுக்கு வழங்கப்பட்டது. இதில் மீதமுள்ள, 5 கிலோ பைகளை பொது வினியோக திட்டத்தில், ரேஷன் கடைகளில் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இது குறித்து, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக நிர்வாக இயக்குனர் அண்ணாதுரை, மண்டல மேலாளர்களுக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் தயார் செய்யப்பட்ட, 7 லட்சம் எண்ணிக்கை கொண்ட, 5 கிலோ அரிசி பைகள், பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு வினியோகம் செய்ய அனுப்பி வைக்கப்பட்டது. இரண்டாம் கட்டமாக, கரூர், ஈரோடு, சேலம், திருச்சி மண்டலங்களில், 5 லட்சம்
எண்ணிக்கை கொண்ட, 5 கிலோ அரிசி பைகள் தயார் செய்யப்பட்டு இருப்பில் உள்ளது.அரசு உத்தரவின் படி, உபயோகிக்கப்படாத நிலையில் உள்ள, 5 கிலோ நிவாரண அரிசி பைகளை, பொது வினியோக திட்டத்தில் வழங்கலாம். இவைகளை வினியோகம் செய்த பின், பயன்பாட்டு சான்றிதழை, உடனே தலைமை அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.