/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
திருடனை பொது மக்கள் விரட்டியபோதுரூ.9 லட்சத்தை போட்டு விட்டு தப்பினார்

ADDED : பிப் 27, 2025 02:26 AM
திருடனை பொது மக்கள் விரட்டியபோதுரூ.9 லட்சத்தை போட்டு விட்டு தப்பினார்
குளித்தலை: குளித்தலை அடுத்த, கழுகூர் பஞ்., மாகாளிப்பட்டியை சேர்ந்தவர் தங்கவேல்ராஜ், 47, விவசாயி. இவர் கடந்த, 24 மதியம் 1:00 மணியளவில் குளித்தலை ஸ்டேட் பேங்கில் இருந்து, நிலம் விற்ற வகையில், ஒன்பது லட்சம் ரூபாயை எடுத்துக் கொண்டு, தனது டூவீலரில் வந்து கொண்டிருந்தார். குளித்தலை-மணப்பாறை நெடுஞ்சாலையில், குண்ணாகவுண்டம்பட்டி அருகில் பஞ்சர் கடையில் தனது வாகனத்துக்கு காற்று பிடித்துக் கொண்டிருந்தார்.அப்போது, வாகன டேங்க் கவரில் மஞ்சள் பையில் வைத்த பணத்தை ஒருவர் எடுத்துக் கொண்டு ஓடினார். உடனே தங்கவேல் கூச்சலிட்டார். அருகில் இருந்தவர்கள் திருடனை துரத்த, அவர் பணத்தை கீழே போட்டுவிட்டு, அ.உடையாபட்டி பாலம் அருகில் தலைமறைவானார். இது
குறித்து தங்கவேல்ராஜ் கொடுத்த புகார்படி, தோகைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம நபரை தேடி வருகின்றனர்.