/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
நாரதகான சபாவின் 80வது ஆண்டு விழாவையொட்டி கலை நிகழ்ச்சி
/
நாரதகான சபாவின் 80வது ஆண்டு விழாவையொட்டி கலை நிகழ்ச்சி
நாரதகான சபாவின் 80வது ஆண்டு விழாவையொட்டி கலை நிகழ்ச்சி
நாரதகான சபாவின் 80வது ஆண்டு விழாவையொட்டி கலை நிகழ்ச்சி
ADDED : செப் 18, 2024 06:57 AM
கரூர்: கரூர், நாரத கான சபாவின், 80வது ஆண்டு விழா வரும், 22ல் தொடங்குகிறது.
அன்று மாலை, 6:30 மணிக்கு சபா தலைவர் சூரிய நாராயணன் தலைமையில், கலெக்டர் தங்கவேல் விழாவை தொடங்கி வைக்கிறார். தொடர்ந்து வரும், 23ல் பெங்களூரு ஸ்வப்னா ராஜேந்திர குமார் குழுவினரின், லாஸ்ய சந்தியா என்ற மோகினி ஆட்டம், 24ல் குன்னக்குடி பால முரளி கிருஷ்ணாவின் வாய்ப்பாட்டு நிகழ்ச்சி, 25ல் எம்பார் கண்ணன் குழுவினரின் வயலின் இசை நிகழ்ச்சி,
26ல் டாக்டர் சவுமியாவின் வாய்ப்பாட்டு நிகழ்ச்சி நடக்கிறது. வரும், 27ல் கவிதா ஜவஹர் தலைமையில் பட்டிமன்றம், 28 நடிகர் காத்தாடி ராமமூர்த்தி குழுவினரின் சிக்கல் சிவராமன் என்ற நகைச்சுவை நாடகம், 29ல் ஜூகல் பந்தி நாடகம், 30ல் ஆயக்குடி ஆனந்த கிருஷ்ணன் பாகவதர் குழுவினரின் நாமசங்கீர்த்தனம் நிகழ்ச்சி, அக்., 1 ல் விசாக ஹரி வழங்கும் திருவேங்கட முடையாள் மகிமை என்ற உபன்யாசம் நடக்கிறது. வரும், 23 முதல், அக்., 1 வரை அனைத்து நிகழ்ச்சிகளும் மாலை, 6:00 மணிக்கு தொடங்கும். அனுமதி இலவசம்.

