/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
குண்டும், குழியுமான கட்டளை சாலையால் ஓட்டுனர்கள் தவிப்பு
/
குண்டும், குழியுமான கட்டளை சாலையால் ஓட்டுனர்கள் தவிப்பு
குண்டும், குழியுமான கட்டளை சாலையால் ஓட்டுனர்கள் தவிப்பு
குண்டும், குழியுமான கட்டளை சாலையால் ஓட்டுனர்கள் தவிப்பு
ADDED : பிப் 25, 2025 04:38 AM
கரூர்: கரூர் அருகில் கட்டளை சாலை குண்டும், குழியமாக இருப்-பதால் வாகன ஓட்டிகள் தவித்து வருகின்றனர்.
மாயனுார் கதவணையில் கடல் போல தேங்கிக் கிடக்கும் காவிரி நீரை காண்பதற்கும், அங்குள்ள பூங்காக்களில் அமர்ந்து சிறு-வர்கள் விளையாடவும் கரூர், திருச்சி மாவட்டங்களை சேர்ந்த ஏராளமானோர் சுற்றுலாவாக வந்து செல்கின்றனர். செல்லாண்டி-யம்மன் கோவிலுக்கும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்-றனர்.
இவ்வாறு சுற்றுலா பயணிகள் அதிகளவில் மாயனுார் வந்து, பின் கரூர், திண்டுக்கல் போன்ற மாவட்டங்களுக்கு செல்ல பெரும்-பாலும் கட்டளை வழியாக பயணிக்கின்றனர். இந்த சாலை குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால், வாகன ஓட்-டிகள் அவதியுறுகின்றனர். எனவே, மாயனுார் -கட்டளை சாலையை சீரமைக்க வேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.