/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சாப்ட்வேர் இன்ஜினியரிடம் ரூ.14.52 லட்சம் மோசடி
/
சாப்ட்வேர் இன்ஜினியரிடம் ரூ.14.52 லட்சம் மோசடி
ADDED : செப் 10, 2024 05:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாமக்கல்: நாமக்கல்- - மோகனுார் சாலையை சேர்ந்தவர் மனோஜ்குமார், 32. இவர், சென்னையில் உள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். அவர், 'வாட்ஸாப்' குரூப்பில் வந்த ஒரு லிங்கை கிளிக் செய்துள்ளார்.
அப்போது, அதில் டாஸ்க் செய்தால், அதிக அளவு கமிஷன் கிடைக்கும் என தகவல் வந்துள்ளது. அதை உண்மை என நம்பிய மனோஜ்குமார், ஆன்லைனில், 11 தவணையாக, 14.52 லட்சம் ரூபாய் செலுத்தியுள்ளார். ஆனால், வெறும் 200
ரூபாய் மட்டுமே திரும்பி வந்துள்ளது. அதனால், தான் மோசடி செய்யப்பட்டதை அறிந்த மனோஜ்குமார், இது குறித்து, நாமக்கல் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகாரளித்தார். போலீசார் விசா-ரணை நடத்தி வருகின்றனர்.

