/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மாயனுார் கதவணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு
/
மாயனுார் கதவணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு
ADDED : ஆக 01, 2024 07:20 AM
கரூர்: மேட்டூர் அணை நிரம்பியதால் மாயனுார் கதவணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து வருகிறது.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக, கர்நாடக அணைகள் நிரம்பியது. அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பியதையடுத்து, காவிரியில் உபரிநீர் வெளியேற்றப்படுகிறது. இதனால், காவிரியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, மேட்டூர் அணைக்கு, கடந்த 16 முதல் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவான, 120 அடியை எட்டியது. அணையின் உபரி நீர் போக்கியான, 16 கண் மதகு வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதனால், கரூர் மாயனுார் கதவணையில் நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகி-றது. இதன்படி, நேற்று இரவு, 8.00 மணி நிலவரப்படி, 81,860 கன அடி தண்ணீர் வருகிறது. அதுமுழுவதும் காவிரி ஆற்றில் திறந்த விடப்படுகிறது.திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அமராவதி அணைக்கு, நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 4,047 கனஅடி தண்ணீர் வந்தது. அமராவதி ஆறு, பாசன வாய்க்-கால்களில் வினாடிக்கு, 4,298 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. அணை நீர்மட்டம், 88.52 அடியாக உள்ளது.கரூர் அருகே, பெரிய ஆண்டாங்கோவில் தடுப்பணைக்கு வினாடிக்கு, 1,261 கனஅடி தண்ணீர் வந்துகொண்டுள்ளது.