/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ஆபத்தை உணராமல் காவிரி ஆற்றில் மக்கள் குளியல்
/
ஆபத்தை உணராமல் காவிரி ஆற்றில் மக்கள் குளியல்
ADDED : ஆக 01, 2024 07:27 AM
கிருஷ்ணராயபுரம்: மாயனுார், செல்லாண்டியம்மன் கோவில் முன் காவிரி ஆற்றில் பாதுகாப்பு இன்றி மக்கள் குளித்து வருகின்றனர்.
கிருஷ்ணராயபுரம் அடுத்த, மாயனுார் காவிரி ஆற்றில் உபரி நீர் சென்று கொண்டுள்ளது. தற்போது தண்ணீர் காவிரி கரையோரம் வரை வருகிறது. நேற்று, செல்லாண்டியம்மன் கோவில் வந்த பக்-தர்கள் காவிரியில் குளிப்பதற்காக, ஆற்றில் இறங்கி பாதுகாப்பு இல்லாமல் குளித்தனர். இந்த இடத்தில் நீர்வளத்துறை, மாவட்ட நிர்வாகம், போலீசார் சார்பில், காவிரியில் குளிக்கக் கூடாது என விழிப்புணர்வு போர்டுகள் வைக்கப்பட்டுள்ளது. இருந்தும் அதை கண்டுகொள்ளாமல் மக்கள் குளித்து வருகின்றனர். விரைவில் ஆடி பெருக்கு விழா வரவுள்ளது. கோவிலுக்கு பக்தர்கள் அதிகம் பேர் வருவர். இவர்கள் ஆற்றில் குளிக்க வாய்ப்பு உள்ளது. எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும் வகையில், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும்.