/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சாலையில் சரிந்த பாதாள சாக்கடை மூடி பள்ளம் விழும் அச்சத்தில் மக்கள்
/
சாலையில் சரிந்த பாதாள சாக்கடை மூடி பள்ளம் விழும் அச்சத்தில் மக்கள்
சாலையில் சரிந்த பாதாள சாக்கடை மூடி பள்ளம் விழும் அச்சத்தில் மக்கள்
சாலையில் சரிந்த பாதாள சாக்கடை மூடி பள்ளம் விழும் அச்சத்தில் மக்கள்
ADDED : ஆக 25, 2024 06:52 AM
கரூர்: கரூரில், பாதாள சாக்கடை மூடி சரிந்துள்ளதால், அப்பகுதி மக்கள் சாலையில், பள்ளம் விழுந்து விடுமா என்ற அச்சத்தில் உள்ளனர்.
கரூர் மாநகராட்சி பகுதியில், பாதாள சாக்கடை திட்டம் செயல்-பாட்டில் உள்ளது. அதில், அடைப்பு மற்றும் சாக்கடை கழிவுகள் வெளியேறும் போது, அதை சரி செய்ய சாலையில் வட்ட வடிவில், துவாரம் போடப்பட்டு,சிமென்ட் மூடி வைக்கப்பட்டுள்-ளது.
இந்நிலையில், கரூர் எம்.ஜி., சாலையில் சில நாட்களுக்கு முன்பு, பல இடங்களில் பாதாள சாக்கடை மூடிகள் சரிந்தது. இதுகுறித்து, அப்பகுதி மக்கள் மாநகராட்சி அலுவலகத்தில் புகார் செய்தனர். ஆனால் அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. இதனால், வாகனங்கள் செல்லாத வகையில் பாதாள சாக்கடை மூடி சரிந்த இடத்தில், கற்களை பாதுகாப்புக்காக மக்கள் வைத்-துள்ளனர்.
இதுகுறித்து இப்பகுதியினர் கூறியதாவது:கரூர் நகரில் அடிக்கடி, பாதாள சாக்கடை குழாயில் ஏற்படும் அழுத்தம் காரணமாக, பல முறை சாலையில் பள்ளம் விழுந்துள்-ளது. குறிப்பாக கோவை சாலை, ரயில்வே ஸ்டேஷன் சாலை, அண்ணாதுரை வளைவு மற்றும் ராஜாஜி சாலையில் பல முறை பள்ளம் விழுந்து, போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், எம்.ஜி., சாலையில் பாதாள சாக்கடை மூடிகள் சரிந்ததும், குழாயில் அழுத்தம் ஏற்பட்டு, பெரியளவில் பள்ளம் விழும் முன், அதை தடுக்க மாநகராட்சி அலுவலகத்தில் புகார் செய்தும் பயன் இல்லை.
இந்த பகுதியில், 300க்கும் மேற்பட்ட வீடுகள், மருத்துவம-னைகள், வணிக நிறுவனங்கள் உள்ளது. இதனால், பெரியளவில் பள்ளம் விழுந்து பாதிப்பு ஏற்படும் முன், சரிந்த பாதாள சாக்-கடை மூடியை சரி செய்ய, மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு கூறினர்.

