/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
காலாவதி தின்பண்டம் விற்பனை இரு கடைக்கு அபராதம் விதிப்பு
/
காலாவதி தின்பண்டம் விற்பனை இரு கடைக்கு அபராதம் விதிப்பு
காலாவதி தின்பண்டம் விற்பனை இரு கடைக்கு அபராதம் விதிப்பு
காலாவதி தின்பண்டம் விற்பனை இரு கடைக்கு அபராதம் விதிப்பு
ADDED : மார் 02, 2025 06:55 AM
குளித்தலை: குளித்தலை அடுத்த, தோகைமலையில் மணப்பாறை மெயின்-ரோட்டில் உள்ள பேக்கரி ஒன்றில், யுவராஜ் என்பவர் பிறந்த நாள் கொண்டாடுவதற்காக கேக் பெற்று சென்றுள்ளார். பிறந்த நாளின்-போது, அப்பகுதியில் உள்ள ஆஷா, ரிதன்யா உள்ளிட்ட சிலர் கேக் சாப்பிட்டு உள்ளனர். சிறிது நேரத்தில் வாந்தி எடுத்துள்-ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள், அந்த கேக்கை பார்த்த போது அதில் துர்நாற்றத்துடன் புழுக்கள் இருந்துள்ளது.
இது குறித்து தோகைமலை போலீசில் யுவராஜ் புகார் அளித்தார். இதையடுத்து, உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் ராமமூர்த்தி, தோகைமலை வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பொன்னுசாமி ஆகியோர் ஆய்வு செய்தனர். அப்போது, பேக்கரி கடைகளில் அடுக்கி வைத்திருந்த தின்பண்டங்களை ஆய்வு செய்-ததில், தயாரிப்பு தேதி, காலாவதி தேதி குறிப்பிடாமல் விற்பனை செய்தது தெரிய வந்தது.இதேபோல் காலாவதியான குளிர்பானங்களும், ஒரே நாளில் காலாவதியாகக்கூடிய பால் பாக்கெட்டுகளும் விற்பனைக்கு இருந்-ததை பார்த்து, அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து, இரு கடைகளுக்கு தலா, 1,000 ரூபாய் அபராதம் விதித்தனர். மேலும் பேக்கரி கடையில் இருந்த, கேக் வகைகளை ஆய்வுக்-காக எடுத்து சென்றனர்.