/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பால் உற்பத்தியை பெருக்க 'கோகுல் விஷன்' திட்டம் வருமா? தமிழகத்துக்கு பசுங்கன்றுகள் ஈனும் தொழில் நுட்பம் அவ-சியம்
/
பால் உற்பத்தியை பெருக்க 'கோகுல் விஷன்' திட்டம் வருமா? தமிழகத்துக்கு பசுங்கன்றுகள் ஈனும் தொழில் நுட்பம் அவ-சியம்
பால் உற்பத்தியை பெருக்க 'கோகுல் விஷன்' திட்டம் வருமா? தமிழகத்துக்கு பசுங்கன்றுகள் ஈனும் தொழில் நுட்பம் அவ-சியம்
பால் உற்பத்தியை பெருக்க 'கோகுல் விஷன்' திட்டம் வருமா? தமிழகத்துக்கு பசுங்கன்றுகள் ஈனும் தொழில் நுட்பம் அவ-சியம்
ADDED : பிப் 25, 2025 06:50 AM
கரூர்: 'பால் உற்பத்தியை பெருக்கும் வகையில், மாடுகள் பசுங்கன்று-களை மட்டுமே ஈனும், புதிய கோகுல் விஷன் தொழில்நுட்-பத்தை, தமிழகத்துக்கு கொண்டு வர வேண்டு'ம் என, காவிரி நீர்ப்பாசன நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில், விவசாயம் சார்ந்த தொழிலாக கால்நடை வளர்ப்பு உள்ளது. விவசாயிகளால் வளர்க்கப்படும் பசு மாடுகள், கன்றுகள் ஈனும் போது, காளை கன்றுகளை விட பசுங்கன்றுகள் ஈன்றால் லாபம் கிடைக்கும். காளை கன்றுகள் குறிப்பிட்ட காலத்-துக்கு பின்னர் அடிமாடுகாளாக விற்கப்படுகின்றன. இதனால், பால் உற்பத்தியை பெருக்கும் வகையில், பசுங்கன்றுகள் மட்டும் ஈனும் திட்டம் சில மாநிலங்களில் திட்டமிடப்பட்டு வருகிறது. பசுங்கன்றுகளை மட்டுமே ஈனும், புதிய தொழில் நுட்பமான, 'கோகுல் மிஷன்' திட்டத்தை, ரிஷிகேஷில் உள்ள ஒரு சோதனை சாலை கண்டுபிடித்துள்ளது. இதற்காக பாலினம் செய்யப்பட்ட விந்தணு உற்பத்தியும் தொடங்கியுள்ளது.இதுகுறித்து, காவிரி நீர்ப்பாசன நலச்சங்க தலைவர் மகாதான-புரம் ராஜாராம் கூறியதாவது:கடந்த சில ஆண்டுகளாக, சீதோஷ்ண நிலை உள்ளிட்ட பல்-வேறு காரணங்களால், தமிழகத்தில் பசுங்கன்றுகள் பிறப்பு விகிதம் குறைந்து வருகிறது. பசுமாடுகள், காளை கன்றுகளை அதிகளவில் ஈனுகிறது. எனவே, கோகுல் மிஷன் திட்ட முறையில், விந்தணுவை பயன்படுத்தி மாடுகளை சினைப்ப-டுத்தும் முயற்சியில் தமிழக அரசு கவனம் செலுத்த வேண்டும். இந்த திட்டம், பல ஆண்டுகளாக உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்-ளது. அங்கு பசுமாடுகள், 90 சதவீதம் பசுங்கன்றுகளை மட்டுமே ஈனுவதால், மாடு வளர்ப்போர், விவசாயிகள், பால் உற்பத்தி-யாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.இந்த முறை கருத்தரிப்புக்குள்ளாகும் ஒவ்வொரு பசுவுக்கும் மத்திய அரசு, 400 ரூபாய், மாநில அரசு, 400 ரூபாய் மானியமாக வழங்குகிறது. மானிய தொகையை உயர்த்தி, இந்த திட்டத்தை, நாடு முழுவதும் விரிவுப்படுத்த, மத்திய அரசு திட்டமிட்டு வருகி-றது. எனவே தமிழக அரசு, மத்திய அரசு மற்றும் உத்தரகாண்ட் மாநில அரசுடன் கலந்து பேசி, விவசாய துறையில் உள்ள தொழில்நுட்ப அதிகாரிகளை, உத்தரகாண்ட் மாநிலத்துக்கு அனுப்ப வேண்டும்.அங்கு நடைமுறையில் உள்ள, பசுங்கன்றுகளை மட்டுமே ஈனும் தொழில் நுட்பத்தை அறிந்து, அதை தமிழகத்தில் நடைமு-றைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக, அடுத்த மாதம் தமிழக சட்டசபையில், தாக்கலாக உள்ள விவசாயி-களுக்கான தனி பட்ஜெட்டில், இந்த அறிவிப்பை வெளியிட நட-வடிக்கை எடுக்க வேண்டும். இதனால், வளர்ந்து வரும் மக்கள் தொகை பெருக்கத்துக்கு ஏற்ப, தமிழகத்தில் பால் உற்பத்தியை பெருக்க முடியும். இதனால், கால்நடை வளர்ப்பு விவசாயிக-ளுக்கு, பால் உற்பத்தி மூலம் கூடுதல் லாபம் கிடைக்கும். கிரா-மப்புற பொருளாதாரமும் உயரும்.இவ்வாறு கூறினார்.

