/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ஆடி வெள்ளியையொட்டி அம்மன் கோவில்களில் வழிபாடு
/
ஆடி வெள்ளியையொட்டி அம்மன் கோவில்களில் வழிபாடு
ADDED : ஆக 10, 2024 06:39 AM
கரூர்: ஆடி வெள்ளியையொட்டி, கரூர் வேம்பு மாரியம்மன், ஸ்ரீ வராகி அம்மன் அலங்காரத்தில் நேற்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
நேற்று நான்காவது ஆடி வெள்ளியையொட்டி, கரூர் நகரில் உள்ள பிரசித்தி பெற்ற கல்யாண பசுபதீஸ்வரர் கோவில், மாரி-யம்மன் கோவில், தான்தோன்றி மலை வெங்கடரமண கோவில், பகவதி அம்மன் கோவில், ஜவஹர் பஜார் கன்னிகா பரமேஸ்வரி கோவில், சுங்ககேட் ஆதி மாரியம்மன் கோவில், எல்.ஜி.பி., நகர் துர்க்கை அம்மன் கோவில், காளியம்மன் கோவில், கரியாம்பட்டி அங்காள பரமேஸ்வரி கோவில், வெங்கமேடு காமாட்சியம்மன் கோவில் மற்றும் நெரூர் சதாசிவ பிரமேந்திரர் அதிஷ்டானம் உள்-ளிட்ட, பல்வேறு கோவில்களில் பக்தர்கள் சுவாமியை வழிபட்-டனர். வேம்பு மாரியம்மன், ஸ்ரீ வராகி அம்மன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அதேபோல் வெண்ணை மலை, பவித்திரம், புகழூரில் உள்ள பாலசுப்பிரமணியர், நன்செய் புகழூர் மேகபா-லீஸ்வரர் கோவில்களில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
* குளித்தலை, முத்துபூபால சமுத்திரம் மாரியம்மன், பாலதண்-டாயுதபாணி முருகன், ஐயப்பன், நீலமேக பெருமாள், லட்சுமிநா-ராயண பெருமாள் ,கோட்டை மாரியம்மன் ஆகிய கோவில்களில் ஆடி வெள்ளி கிழமையொட்டி பக்தர்கள் பூஜைகள் செய்து, வழி-பட்டனர்.
இதேபோல், கடம்பவனேஸ்வரர் கோவில், அய்யர்மலை ரத்தின-கிரீஸ்வரர், சிவாயம் சிவபுரீஸ்வரர், மேட்டுமருதுார் ஆராஅமு-தீஸ்வரர், மருதுார் மீனாட்சி சுந்தரேஸ்வரர், தண்ணீர்பள்ளி ஏகாம்-பரேஸ்வரர், பெரியபாலம் நதிஈஸ்வரர், ஆர்.டி.மலை விராச்சி-லேஸ்வரர் சின்னரெட்டியபட்டி ஆவுடைலிங்கேஸ்வரர், தோகைமலை மீனாட்சி சுந்தரேஸ்வரர், இடையபட்டி ரத்தினகி-ரீஸ்வரர், கழுகூர் மீனாட்சி சுந்தரேஸ்வரர் உள்ளிட்ட பகுதி சிவாலயங்களில் ஆடி வெள்ளியையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தன. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.