/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
விதிமுறை மீறிய வேகத்தடைகள்: ஓட்டுனர்கள் விபத்தில் சிக்கும் அபாயம்
/
விதிமுறை மீறிய வேகத்தடைகள்: ஓட்டுனர்கள் விபத்தில் சிக்கும் அபாயம்
விதிமுறை மீறிய வேகத்தடைகள்: ஓட்டுனர்கள் விபத்தில் சிக்கும் அபாயம்
விதிமுறை மீறிய வேகத்தடைகள்: ஓட்டுனர்கள் விபத்தில் சிக்கும் அபாயம்
ADDED : ஜன 29, 2025 07:04 AM
கரூர்: கரூர் நகரின் பல இடங்களில், விதிகளை மீறி அமைக்கப்படும் வேகத்தடைகளால் விபத்துகள் ஏற்படுகிறது.
கரூர் மாநகராட்சி பகுதிகளில், விபத்துகளை தடுப்பதற்காக பள்ளிகள், மருத்துவமனைகள், சாலை சந்திப்பு, மக்கள் அதிகமாக கடந்து செல்லும் பகுதி, அலுவலகங்கள் ஆகிய இடங்களில் வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன. வேகத்தடை அமைப்பதற்கு முன், அந்த இடத்தின் இரு மார்க்கத்திலும், 10 மீட்டர் துாரத்துக்கு முன்பாக வெள்ளை பெயின்ட்டால் எச்சரிக்கை கோடு அமைக்க வேண்டும். வேகத்தடை அமைக்கும்போது, 10 செ.மீ., உயரத்துக்கு மேல் இருக்கக் கூடாது. மேலும் வேகத்தடை மீது வெள்ளை நிற பெயின்ட் அடிக்க வேண்டும். வேகத் தடைக்கான சரிவு துவங்கும் இடத்தில், ஒளிரும் டிவைடர் (ஒளிர் பட்டை) விளக்கு பொருத்த வேண்டும் என, நெடுஞ்சாலைத்துறை விதி உள்ளது. சில சாலைகளில் மட்டுமே, விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றன.
உட்புற சாலைகள், கிளை சாலைகள், புறநகர் பகுதிகளில் பெரும்பாலும் நடைமுறைகள் பின்பற்றப்படுவதில்லை. தற்போது கரூர் ஜவகர் பஜாரில், தாலுகா அலுவலகம் முன்புறம் வேகத்தடை உள்ளது. வாகன ஓட்டிகள் அறிந்து கொள்ளும் வகையில் வெள்ளை கோடு, ஒளிரும் டிவைடர் வைக்கப்படவில்லை. இதனால், வாகன ஓட்டிகள் விபத்துகளில் சிக்கும் அபாயம் உள்ளது. வேகமாக வரும்போது, இரண்டு சக்கர வாகனங்கள் மட்டுமின்றி, நான்கு சக்கர வாகனங்களும், அங்கு வேகத்தடை இருப்பது தெரியாமல் கட்டுப்பாட்டை இழந்து விபத்துகளில் சிக்குகின்றனர்.
இது போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையாக இருப்பதால், வாகனம் நிலை தடுமாறும் போது உயிரிழப்பு ஏற்படும் ஆபத்து காத்திருக்கிறது. விதிகளை மீறி அமைக்கப்படும் வேகத்தடைகளை அகற்ற வேண்டும் அல்லது வெள்ளை வண்ணம் போன்ற முன்னெரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

