/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ஓ.பி.எஸ்., அணியினர்அ.தி.மு.க.,வில் ஐக்கியம்
/
ஓ.பி.எஸ்., அணியினர்அ.தி.மு.க.,வில் ஐக்கியம்
ADDED : பிப் 15, 2025 02:04 AM
ஓ.பி.எஸ்., அணியினர்அ.தி.மு.க.,வில் ஐக்கியம்
கரூர்:கரூரில், ஓ.பி.எஸ்., அணியினர், அ.தி.மு.க.,வுக்கு தாவினர்.முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ்., அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்பு குழு என்ற பெயரில், தனி அணியாக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில், கரூர் மேற்கு மாவட்டத்தை சேர்ந்த, மாவட்ட துணை செயலர் கவிதா, தான்தோன்றிமலை நகர செயலர் கோபால், இணை செயலர் செந்தில் குமார் உள்பட, 18 பேர் ஓ.பி.எஸ்., அணியில் இருந்து விலகி, கரூர் மாவட்ட அ.தி.மு.க., செயலர் விஜயபாஸ்கர் முன்னிலையில், அக்கட்சியில் சேர்ந்தனர்.
அப்போது, மாவட்ட துணை செயலர் ஆலம் தங்கராஜ், வர்த்தக அணி துணை செயலர் ராதா, வார்டு செயலர்கள் முருகேஷ், ராம்குமார்
உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.