ADDED : பிப் 19, 2025 01:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சின்னதாராபுரத்தில் பைக் திருட்டு
கரூர்:சின்னதாராபுரம் அருகே, பைக்கை திருடி சென்ற மர்ம நபரை, போலீசார் தேடி வருகின்றனர்.கரூர் மாவட்டம், சின்னதாராபுரம் காட்டாம் புதுார் பகுதியை சேர்ந்த பொம்முசாமி என்பவரது மகன் பிரேம் குமார், 23. இவர் கடந்த, 7 மதியம் காட்டாம்புதுாரில் உள்ள உறவினர் வீட்டு முன், ஸ்பிளண்டர் பிளஸ் பைக்கை நிறுத்தி விட்டு சென்றார். சிறிது நேரம் கழித்து, பிரேம் குமார் சென்று பார்த்த போது, பைக்கை காணவில்லை. மர்ம நபர் திருடி சென்றுள்ளார். இது குறித்து, பிரேம் குமார் அளித்த புகார்படி, சின்னதாராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த பகுதிகளில் உள்ள 'சிசிடிவி' கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

