/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மஞ்சமேடு வாய்க்காலில்ஆகாயத்தாமரை ஆக்கிரமி
/
மஞ்சமேடு வாய்க்காலில்ஆகாயத்தாமரை ஆக்கிரமி
ADDED : மார் 08, 2025 01:30 AM
மஞ்சமேடு வாய்க்காலில்ஆகாயத்தாமரை ஆக்கிரமிப்பு
கிருஷ்ணராயபுரம்:கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்சாயத்து, மஞ்சமேடு பகுதியில் இருந்து பாசன வாய்க்கால் செல்கிறது. இந்த வாய்க்கால் தண்ணீரை கொண்டு, விவசாயிகள் விளை நிலங்களில் வாழை, வெற்றிலை, நெல், சோளம் உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர். தற்போது இந்த மஞ்சமேடு வாய்க்காலில் ஆகாயத்தாமரை செடிகள் வளர்ந்து ஆக்கிரமித்துள்ளன.
இந்த செடிகள், பாசன நீரை உறிஞ்சுகொள்வதால், விவசாய நிலங்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. கோடை துவங்க உள்ளதால், சாகுபடி பயிர்களுக்கு மேலும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் நிலை உள்ளது. எனவே, வாய்க்காலில் வளர்ந்துள்ள ஆகாயத்தாமரை செடிகளை அகற்ற டவுன் பஞ்சாயத்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தொழிலாளியை மண்வெட்டியால் தாக்கியவர் கைது
கரூர்:கரூர் அருகே, முன் விரோதம் காரணமாக கூலி தொழிலாளியை, மண் வெட்டியால் வெட்டிய, வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கரூர் மாவட்டம், பாலம்மாள்புரம் கே.எம்.சி., காலனியை சேர்ந்தவர் கார்த்தி, 29; கூலி தொழிலாளி. இவர் கடந்த, 4 இரவு வீட்டுக்கு முன்னால், நின்று கொண்டிருந்தார்.
அப்போது, அதே பகுதியை சேர்ந்த முருகன், 28; என்பவர் முன் விரோதம் காரணமாக மதுபோதையில், கார்த்தியிடம் தகாத வார்த்தை பேசி தகராறு செய்துள்ளார்.
அப்போது, தட்டி கட்ட கார்த்தியை, மண் வெட்டியால் முருகன் வெட்டினார். அதில், தலையில் படுகாயமடைந்த கார்த்தியை அக்கம் பக்கத்தினர் மீட்டனர்.
பின்னர் கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதையடுத்து கார்த்தி கொடுத்த புகார்படி, வெங்கமேடு போலீசார் முருகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.