sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/கரூர்/ செட்டிபாளையம் தடுப்பணைக்குநீர் வரத்து அதிகரிப்பு

செட்டிபாளையம் தடுப்பணைக்குநீர் வரத்து அதிகரிப்பு

செட்டிபாளையம் தடுப்பணைக்குநீர் வரத்து அதிகரிப்பு


ADDED : மார் 18, 2025 01:42 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 18, 2025 01:42 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

செட்டிபாளையம் தடுப்பணைக்குநீர் வரத்து அதிகரிப்பு

கரூர்:திருப்பூர் மாவட்டம், உடுமலை பேட்டை அமராவதி அணையில் இருந்து கடந்த சில மாதங்களுக்கு முன், வினாடிக்கு, 50,000 ஆயிரம் கன அடி வரை ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டது.

தற்போது மழை இல்லாத காரணத்தால், அமராவதி அணையில் இருந்து, ஆற்றில் வினாடிக்கு நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி, 74 கனஅடி மட்டுமே நீர் திறக்கப்பட்டுள்ளது. அணையில் இருந்து, ஆறு, பாசன வாய்க்கால்களில், 150 அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. 90 அடி கொண்ட அணையின் நீர்மட்டம், 51.12 அடியாக இருந்தது.

கடந்த, நான்கு நாட்களுக்கு முன் கரூர் மாவட்டத்தில் சில இடங்களில் மழை பெய்தால், கரூர் அருகில் செட்டிபாளையம் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. இங்கு, நேற்று காலை, 6.00 மணி நிலவரப்படி, 306 கனஅடி தண்ணீர் வருகிறது. இதனால், தடுப்பணையில் முழுவதும் தண்ணீர் தேங்கி உள்ளது.

* மாயனுார் கதவணைக்கு நேற்று காலை, 6:00 மணி நிலவரப்-படி வினாடிக்கு, 219 கன அடியாக தண்ணீர் வந்தது. அந்த தண்ணீர் முழுவதும் காவிரியாற்றில் திறக்கப்பட்டது. நான்கு பாசன வாய்க்காலில், தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது.

* க.பரமத்தி அருகே, கார் வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு, நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி தண்ணீர் வரத்து இல்லை. 26.90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 10.29 அடியாக இருந்தது. அணையில் இருந்து, நொய்யல் வாய்க்-காலில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us