ADDED : மார் 21, 2025 01:55 AM
அ நிறம் | அளவு
களை எடுக்கும் பணிவிவசாயிகள் தீவிரம்
கிருஷ்ணராயபுரம்:கிருஷ்ணராயபுரம் பகுதிகளில், மரவள்ளி கிழங்கு செடிகளை சுற்றியுள்ள களைகளை அகற்றும் பணி நடந்தது. கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட மகிளிப்பட்டி, உடையந்தோட்டம், புனவாசிப்பட்டி, அந்தரப்பட்டி, கணக்கம்பட்டி, மேட்டுப்பட்டு, புதுப்பட்டி, வேங்காம்பட்டி, பாப்பகாப்பட்டி, சிவாயம், குழந்தைப்பட்டி பகுதிகளில் விவசாயிகள் மரவள்ளி கிழங்கு சாகுபடி செய்து வருகின்றனர். மரவள்ளி கிழங்கு குச்சிகள் நடவு செய்யப்பட்டு, செடிகள் பசுமையாக வளர்ந்து வருகிறது. தற்போது, செடிகளில் களைகள் அதிகமாக வளர்ந்து வருவதால் வளர்ச்சி பாதிப்பு ஏற்படுகிறது. இந்நிலையில், விவசாய கூலி தொழிலாளர்களை கொண்டு, மரவள்ளி கிழங்கு செடிகள் நடுவில் வளர்ந்து வரும் களைகளை அகற்றும் பணி நடந்தது.
