sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/கரூர்/ நகை மதிப்பீட்டாளர் பயிற்சிவிண்ணப்பிக்க அழைப்பு

நகை மதிப்பீட்டாளர் பயிற்சிவிண்ணப்பிக்க அழைப்பு

நகை மதிப்பீட்டாளர் பயிற்சிவிண்ணப்பிக்க அழைப்பு


ADDED : மார் 25, 2025 01:02 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 25, 2025 01:02 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

நகை மதிப்பீட்டாளர் பயிற்சிவிண்ணப்பிக்க அழைப்பு

கரூர்:கரூரில் உள்ள, திருச்சி கூட்டுறவு மேலாண்மை நிலைய துணை பயிற்சி நிலையத்தில் நடக்க உள்ள, நகை மதிப்பீட்டாளர் பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம் என, மண்டல இணைப்பதிவாளர் கந்தராஜா

தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: கரூரில் உள்ள, திருச்சி கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் பகுதி நேர நகை மதிப்பீட்டாளர் பயிற்சி முகாம் ஏப்., 15ல் தொடங்குகிறது. பயிற்சி காலம், இரண்டு மாதம்.

அதற்கான விண்ணப்பங்கள் கரூரில் உள்ள, திருச்சி கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் வரும் ஏப்., 13 வரை வழங்கப்படுகிறது. நகை மதிப்பீட்டாளர் பயிற்சி பெற கல்வி தகுதி எஸ்.எஸ்.எல்.சி., தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.

பயிற்சி கட்டணமாக, 4,550 ரூபாய் செலுத்த வேண்டும். பயிற்சியின் போது, நகையின் தரம் அறியும் உபகரணங்கள் வழங்கப்படும். பயிற்சி முடிந்து சான்று பெற்றவர்கள், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளலாம். வயது வரம்பு கிடையாது.

பயிற்சியில் தேர்ச்சி பெற்றவர்கள் கூட்டுறவு சங்கங்கள், கூட்டுறவு வங்கிகள் உள்ளிட்ட, அனைத்து வங்கிகளிலும் நகை மதிப்பீட்டாளராக பணியில் சேரலாம். மேலும் விபரங்

களுக்கு, 0431-2715748, 99946-47631 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு, தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us