/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மோசமான சாலையை சீரமைக்கபொதுமக்கள் வேண்டுகோள்
/
மோசமான சாலையை சீரமைக்கபொதுமக்கள் வேண்டுகோள்
ADDED : மார் 27, 2025 01:41 AM
மோசமான சாலையை சீரமைக்கபொதுமக்கள் வேண்டுகோள்
கரூர்:கரூர் மாவட்டம், மணவாடி பஞ்சாயத்துக்குட்பட்ட கல்லுமடை காலனியையும், உப்பிடமங்கலத்தையும் இணைக்கும் கிராம சாலை உள்ளது.
இதன் வழியாகத்தான் கல்லுமடையில் செயல்படும், மணவாடி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான மாணவ, மாணவியர் சைக்கிளிலும், நடந்தும் சென்று வருகின்றனர். விவசாயிகளும் அங்குள்ள தோட்டங்களுக்கு இடுபொருள்களையும், அறுவடை செய்யப்பட்ட விளை பொருட்களையும் எடுத்து
செல்கின்றனர்.இந்த சாலை அமைக்கப்பட்டு, 15 ஆண்டுகளுக்கும் மேல் இருக்கும் என்பதால், சாலையில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் சாலையில் செல்வோர் சிரமப்படுகின்றனர்.
சில நேரங்களில் விபத்தில் சிக்குகின்றனர். இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் செல்வதில் சிரமப்படுகின்றனர். மோசமான சாலையை சீரமைத்து தர வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.