/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
த.வெ.க., சார்பில்தண்ணீர் பந்தல் திறப்பு
/
த.வெ.க., சார்பில்தண்ணீர் பந்தல் திறப்பு
ADDED : ஏப் 03, 2025 01:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
த.வெ.க., சார்பில்தண்ணீர் பந்தல் திறப்பு
குளித்தலை: குளித்தலை சுங்ககேட் பகுதியில், கோடைகாலத்தை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகம் சார்பில், கோடைகால தண்ணீர் பந்தல் திறப்பு விழா நேற்று நடைபெற்றது.
கரூர் கிழக்கு மாவட்ட செயலர் பாலசுப்பிரமணி, இணை செயலர் சதாசிவம் ஆகியோர் தண்ணீர் பந்தலை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு மோர், இளநீர், சர்பத், வெள்ளரி, தண்ணீர் பாட்டில், ஜூஸ், தர்பூசணி உள்ளிட்டவைகளை வழங்கினர்.
குளித்தலை நகர நிர்வாகிகள் விஜய், பிரபு, சிவா, லெஸ்லி, சாந்திபிரியா மற்றும் நகர நிர்வாகிகள் பங்கேற்றனர். இதேப்போல் நச்சலுார், வை.புதுாரில் கோடை கால தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது.