/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கல்லுாரி மாணவன்மாயம்; தந்தை புகார்
/
கல்லுாரி மாணவன்மாயம்; தந்தை புகார்
ADDED : ஏப் 04, 2025 01:13 AM
கல்லுாரி மாணவன்மாயம்; தந்தை புகார்
குளித்தலை:குளித்தலை அடுத்த, உள் வீரராக்கியம் மேற்கு கோட்டைமேடு பகுதியை சேர்ந்தவர் அங்கமுத்து, 47. விவசாய கூலி தொழிலாளி. இவரது மகன் தனுஷ் குமார், 19, கோவையில் உள்ள தனியார் கல்லுாரியில் டிப்ளமோ முதலாம் ஆண்டு படித்து வந்தார். சில தினங்களுக்கு முன், கல்லுாரியில் படிக்கும் மாணவனுடன் ஏற்பட்ட பிரச்னையால், இனிமேல் கல்லுாரிக்கு போனால் அங்கு படிக்க மாட்டேன் என்று கூறியுள்ளார்.
தகவல் அறிந்த தந்தை, கல்லுாரிக்கு சென்று கடந்த, 15 நாட்களுக்கு முன்பு அழைத்து வந்தார். வீட்டில் இருந்து வந்த தனுஷ் குமார் கடந்த மார்ச், 31ல் வீட்டை விட்டு வெளியே சென்றவர், இதுவரை வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும், விசாரித்தும், எந்தவித தகவலும் கிடைக்கவில்லை.
தனது மகனை காணவில்லை என, தந்தை கொடுத்த புகாரின்படி, தோகைமலை போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.

