தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ பயனற்ற நிலையில் பொது கழிப்பிடம்

பயனற்ற நிலையில் பொது கழிப்பிடம்

பயனற்ற நிலையில் பொது கழிப்பிடம்


ADDED : ஏப் 05, 2025 01:43 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 05, 2025 01:43 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பயனற்ற நிலையில் பொது கழிப்பிடம்

கரூர்:கரூர் அருகே, பொது கழிப்பிடம் முட்புதர்கள் முளைத்து பயனற்ற நிலையில், சேதம் அடைந்துள்ளது.கரூர் மாவட்டம், பஞ்சமாதேவி மின்னாம்பள்ளி பஞ்சாயத்து, கரியாலி நகர் பகுதியில், பொதுமக்கள் பயன்பாட்டுக்காக, சில ஆண்டுகளுக்கு முன் பொது கழிப்பிடம் கட்டப்பட்டது. அதை, அப்பகுதி மக்கள் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், கழிப்பிடம் சில மாதங்களுக்கு முன் சேதம் அடைந்தது. அதை பஞ்சாயத்து நிர்வாகம் சரி செய்யவில்லை. மேலும், கழிப்பிடத்துக்குள் நுழைய முடியாதபடி அதிகளவில் முட்புதர்கள் முளைத்துள்ளது. இதனால், அந்த பகுதியை சேர்ந்தவர்கள் கழிப்பிடத்தை பயன்படுத்த முடியாமல், திறந்த வெளிப்பகுதியை பயன்படுத்தி வருகின்றனர்.

இதனால், கரியாலி நகர் பகுதியில் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே, சேதம் அடைந்து முட்புதர்களால் சூழப்பட்டுள்ள, கழிப்பிடத்தை சீரமைத்து பொது மக்கள் பயன்பாட்டுக்கு விட, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us