/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ஒருங்கிணைந்த வாடகை வாகனஸ்டாண்ட் அமைக்கப்படுமா
/
ஒருங்கிணைந்த வாடகை வாகனஸ்டாண்ட் அமைக்கப்படுமா
ADDED : ஏப் 09, 2025 01:29 AM
ஒருங்கிணைந்த வாடகை வாகனஸ்டாண்ட் அமைக்கப்படுமா
அரவக்குறிச்சி:அரவக்குறிச்சியில், மூன்று இடங்களில் செயல்படும் வாடகை வாகன ஸ்டாண்டை ஒருங்கிணைத்து, ஒரே இடத்தில் அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
அரவக்குறிச்சியில், 50ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். வணிக பயன்பாடு, தனி நபர் பயன்பாடு, அவசர தேவை உள்ளிட்டவை
களுக்கு, பெரும்பாலானோர் வாடகை வாகனங்களை பயன்படுத்துகின்றனர். அரவக்குறிச்சி நகரம், 3 கி.மீ., சுற்றளவு கொண்டது. ஆனால், இங்குள்ள ஏ.வி.எம்., கார்னர், தாலுகா அலுவலகம் முன்புறம் மற்றும் பேரூராட்சி அலுவலக பின்புறம் என, மூன்று இடங்களில் வாடகை வாகன ஸ்டாண்டுகள் செயல்பட்டு வருகின்றன.
இதில் ஏ.வி.எம்., கார்னர் பகுதியில் செயல்படும் வாடகை வாகன ஸ்டாண்ட் இருக்கும் இடத்தில், நிழற்கூடம் அமைத்து கொடுக்க வேண்டும், பேரூராட்சி பின்புறம் செயல்படும் வாகன ஸ்டாண்ட் பகுதியில், தற்காலிக பஸ் ஸ்டாண்ட் ஏற்படுத்தி தரலாம். இந்நிலையில், மூன்று வாடகை வாகன ஸ்டாண்டுகளையம் ஒருங்கிணைத்து, ஓரிடத்தில் அமைத்து செயல்படுத்தினால், இட நெருக்கடி இல்லாமல், பொது
மக்களும் குழப்பமின்றி வாடகைக்கு வாகனங்கள் எடுத்து செல்ல உதவியாக இருக்கும்.

