ADDED : ஏப் 12, 2025 01:26 AM
சாலையோரவியாபாரிகளுக்குஆலோசனை கூட்டம்
அரவக்குறிச்சி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சார்பில், அரவக்குறிச்சி பேரூராட்சி அலுவலகத்தில், சாலையோர வியாபாரிகளுக்கான தொழில் வளர்ச்சி பெறக்கூடிய, உத்வேக தொழில் முனைப்பு கூட்டம் நடைபெற்றது.
அரவக்குறிச்சி பேரூராட்சி அலுவலகத்தில், சாலையோர வியாபாரிகளுக்கான தொழில் வளர்ச்சி பெறக்கூடிய உத்வேக தொழில் முனைப்பு கூட்டம், பேரூராட்சி தலைவர் ஜெயந்தி மணிகண்டன் தலைமையில் நடந்தது. இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சார்பில் நடந்த கூட்டத்தில், நிதி ஆலோசகர் ராஜேந்திரன், எல்டிஎம் கரூர் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் வசந்த் ஆகியோர் கலந்து கொண்டு, சாலையோர வியாபாரிகளுக்கு வியாபாரம் பெருக்குதல் மற்றும் சேமிப்பிற்கான வழிமுறைகள், வியாபாரிகளுக்கு புதிய வங்கி கடன் சார்ந்த திட்டங்கள் உள்ளிட்டவற்றை விரிவாக எடுத்துக் கூறினர்.
அரவக்குறிச்சி பகுதியை சேர்ந்த, 50-க்கும் மேற்பட்ட சாலையோர வியாபாரிகள் கலந்து கொண்டனர்.
