ADDED : ஏப் 16, 2025 01:07 AM
கரூர் வட்டாரத்தில்விடிய விடிய மழை
கரூர்:கரூர் மாவட்டத்தில் கடந்த, 15 நாட்களாக கோடை வெயிலின் தாக்கம், படிப்படியாக அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் கரூர் மாவட்டத்தில், 98.24 டிகிரி வெயில் பதிவானது.
கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையிலும், கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு, 11:30 மணிக்கு கரூர் வட்டாரத்தில் பல இடங்களில் பெய்ய தொடங்கிய மழை, நேற்று அதிகாலை வரை நீடித்தது.
கரூர் மாவட்டத்தில் நேற்று காலை, 8:00 மணி வரை கடந்த, 24 மணி நேரத்தில் பெய்த மழையளவு விபரம்:(மி.மீ.,) கரூர், 21, அரவக்குறிச்சி, 14, அணைப்பாளையம், 38, க.பரமத்தி, 29.80, பாலவிடுதி, 5 மி.மீ., மழை பெய்தது. மாவட்டம் முழுவதும் சராசரியாக, 8.98 மி.மீ., மழை பதிவானது. மழையால் வெப்பம் சற்று தணிந்தது.