/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சாலையோரம் கொட்டப்படும் கழிவுகளால் சீர்கேடு
/
சாலையோரம் கொட்டப்படும் கழிவுகளால் சீர்கேடு
ADDED : ஏப் 24, 2025 01:29 AM
அரவக்குறிச்சி:சாலையை கடக்கும் போது, இறைச்சி கழிவுகளால் கடும் துர்நாற்றம் வீசுவதால், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.
கரூரிலிருந்து,
சேலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், பாலத்துறை அருகே வாத்து கறி
விற்பனை செய்யும் கடைகள் செயல்பட்டு வருகின்றன. மேலும், இவ்வழியாக
செல்லும் வாகன ஓட்டிகள் பாலத்துறை வந்து, வாத்து கறி வாங்கிச்
செல்கின்றனர். இதன் காரணமாக ஏராளமான வாத்துகளை அறுத்து,
இறைச்சியாக்கி இங்கே விற்பனை செய்து வருகின்றனர்.
மேலும்
வாத்துகளில் இருந்து அகற்றப்படும் கழிவுகளை, சாலை ஓரத்தில் வாத்து
கடை உரிமையாளர்கள் கொட்டி வருகின்றனர். இதனால் இச்சாலையை கடக்கும்
போது கடும் துர்நாற்றம் வீசுகிறது.
மேலும் வாகன ஓட்டிகள் அவதிப்படுவதுடன், நோய் தொற்று ஏற்படும் அபாயமும் உள்ளது.
எனவே,
இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்
என, இப்பகுதி மக்கள், வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.