/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கிருஷ்ணராயபுரம் பகுதியில் சூரியகாந்தி சாகுபடி
/
கிருஷ்ணராயபுரம் பகுதியில் சூரியகாந்தி சாகுபடி
ADDED : ஜூன் 17, 2025 02:25 AM
கிருஷ்ணராயபுரம், கிருஷ்ணராயபுரம் பகுதிகளில், சூரியகாந்தி சாகுபடி பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட வயலுார், சரவணபுரம், சிவாயம், கோடங்கிப்பட்டி, குழந்தைப்பட்டி, மேட்டுபட்டி, மலையாண்டிப்பட்டி, பாப்பகாப்பட்டி, வேப்பங்குடி, தேசிய மங்களம், பஞ்சப்பட்டி, சேங்கல், செக்கணம் ஆகிய பகுதிகளில் விவசாயிகள் பரவலாக சூரியகாந்தி சாகுபடி செய்து வருகின்றனர்.
கிணற்று நீர் பாசன முறையில் தண்ணீர் பாய்ச்சப்படுகிறது. தற்போது சூரியகாந்தி செடிகளில் பூக்கள் பூத்து குலுங்கி வருகிறது. பூக்களில் விதைகள் பிடித்துள்ளது. சில இடங்களில், விதைகளை அறுவடை செய்து விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனர். சூரியகாந்தி சாகுபடி மூலம், விவசாயிகளுக்கு ஓரளவு வருமானம் கிடைத்து வருகிறது