/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அரவக்குறிச்சி மாணவர்கள் ஹாக்கியில் சிறப்பிடம்
/
அரவக்குறிச்சி மாணவர்கள் ஹாக்கியில் சிறப்பிடம்
ADDED : ஜூலை 04, 2025 01:13 AM
அரவக்குறிச்சி, அரவக்குறிச்சி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவியர் ஹாக்கி போட்டியில் இரண்டாம் இடம் பிடித்தனர்.
அரவக்குறிச்சி குறுவட்ட மையத்திற்கான முதல் போட்டி, சின்னதாராபுரத்தில் நேற்று தொடங்கியது. அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள், மாணவியர், 14 வயதுக்குட்பட்டோர் பிரிவில், ஹாக்கி போட்டியில் முதன்முறையாக பங்கேற்றனர். மாணவர்கள் பிரிவில் இப்பள்ளி, சின்னதாராபுரம் தனியார் பள்ளியோடு மோதி, இரண்டாம் இடம் பெற்றனர். அதேபோல் மாணவியர் அணி இரண்டாம் இடம் பெற்றனர்.
மாணவ, மாணவியர், பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர் சங்கர் மற்றும் ஆங்கில ஆசிரியர் சகாய வில்சனுக்கு, வட்டாரக்கல்வி அலுவலர்கள் சகுந்தலா, தர்மராஜ் மற்றும் தலைமை ஆசிரியர் சாகுல் அமீது, பள்ளி மேலாண்மைக் குழுவினர் பாராட்டு தெரிவித்தனர்.